அந்த வளவை எட்டி எட்டி பார்க்கின்றேன்
காற்சட்டை பைக்குள் இருந்து
கைகளை எடுத்துவிட்டு
மிக அமைதியாக
மிகவும் சாந்தமான
மதிப்பு மிக்க ஒரு தொனியில் அழைப்பதற்கு
என்னை சுதாகரித்து கொண்டேன்
காற்சட்டை பைக்குள் இருந்து
கைகளை எடுத்துவிட்டு
மிக அமைதியாக
மிகவும் சாந்தமான
மதிப்பு மிக்க ஒரு தொனியில் அழைப்பதற்கு
என்னை சுதாகரித்து கொண்டேன்
வாயில் பட்டிருந்த
வெற்றிலைக்கறையை நாவினால் நனைத்து
உதட்டை தடவி மறைத்து
மேற்சட்டை பையில் இருந்த
இரண்டு சிகரெட்டுகளையும் தூக்கி
அப்பால் பற்றைக்குள் வீசிவிட்டேன்
கையில் போட்டிருந்த
இரண்டு இறப்பர் வளையங்களையும் கழற்றி
அதையும் பற்றைக்குள் போட்டுவிட்டேன்
வெற்றிலைக்கறையை நாவினால் நனைத்து
உதட்டை தடவி மறைத்து
மேற்சட்டை பையில் இருந்த
இரண்டு சிகரெட்டுகளையும் தூக்கி
அப்பால் பற்றைக்குள் வீசிவிட்டேன்
கையில் போட்டிருந்த
இரண்டு இறப்பர் வளையங்களையும் கழற்றி
அதையும் பற்றைக்குள் போட்டுவிட்டேன்
தொலைபேசியில்
முகப்பில்
இருந்த நடிகையின் படத்தை நீக்கிவிட்டு
பொன்னியின் செல்வன் படத்தை
பதிவிறக்கம் செய்து போட்டுக்கொண்டேன்
நீளக்காற்சட்டையை
நன்றாக இடுப்புக்கு இழுத்து
அதற்குள் மேற்சட்டையை செருகி சீர்படுத்திக்கொண்டேன்
இருந்த நடிகையின் படத்தை நீக்கிவிட்டு
பொன்னியின் செல்வன் படத்தை
பதிவிறக்கம் செய்து போட்டுக்கொண்டேன்
நீளக்காற்சட்டையை
நன்றாக இடுப்புக்கு இழுத்து
அதற்குள் மேற்சட்டையை செருகி சீர்படுத்திக்கொண்டேன்
யாரென்று என்று என்னை
அங்கிருந்து யாரும் கேட்டால்
எப்படி சொல்வது
நான்தான் என்று சொல்லலாமா
நான்தான் என்று சொல்ல தெரியும் அளவுக்கு
இன்று நான் யார்
அங்கிருந்து யாரும் கேட்டால்
எப்படி சொல்வது
நான்தான் என்று சொல்லலாமா
நான்தான் என்று சொல்ல தெரியும் அளவுக்கு
இன்று நான் யார்
முடிவாய்
அண்ணன் என்று கூப்பிட்டேன்
நான் ஒரு அடிமை வந்துள்ளேன்
என சொன்னேன்
பிரபாகரனின் வீட்டில் இருந்து
இன்று எந்தப்பதிலும் எனக்கு இல்லை
அண்ணன் என்று கூப்பிட்டேன்
நான் ஒரு அடிமை வந்துள்ளேன்
என சொன்னேன்
பிரபாகரனின் வீட்டில் இருந்து
இன்று எந்தப்பதிலும் எனக்கு இல்லை
No comments:
Post a Comment