அம்மா மென்மையாக
உன் பெயரை உச்சரிப்பாள்
அது செல்லமாக அழைக்கும்
அம்முவாகவோ
குட்டியாகவோ
தங்கமாகவோ இருக்கும்
உன் பெயரை உச்சரிப்பாள்
அது செல்லமாக அழைக்கும்
அம்முவாகவோ
குட்டியாகவோ
தங்கமாகவோ இருக்கும்
அழைப்புக்கு பதில் இல்லையென்றால்
அடுப்படியில் இருந்து எழுந்து
வழமையாய் நீ ஆடும் ஊஞ்சலை பார்ப்பாள்
அங்கு நீ இல்லையென்றால்
அடுப்படியில் இருந்து எழுந்து
வழமையாய் நீ ஆடும் ஊஞ்சலை பார்ப்பாள்
அங்கு நீ இல்லையென்றால்
அவளின் முகம் கொஞ்சம் மாறும்
கிணற்றடியை பார்ப்பாள்
பிறகு குரலெடுத்து கூப்பிடுவாள்
அயல் வீட்டில் இருந்து
உன் குரல் கேட்கும்
கிணற்றடியை பார்ப்பாள்
பிறகு குரலெடுத்து கூப்பிடுவாள்
அயல் வீட்டில் இருந்து
உன் குரல் கேட்கும்
அப்போதுதான்
அவளின் படபடப்பு அடங்கும்
பாசத்தின் உச்சத்தில்
உன் மீது ஒரு கோபமும் வரும்
சிலவேளை சிறு கம்பால்
சில அடிகளும் விழும்
அவளின் படபடப்பு அடங்கும்
பாசத்தின் உச்சத்தில்
உன் மீது ஒரு கோபமும் வரும்
சிலவேளை சிறு கம்பால்
சில அடிகளும் விழும்
பிறகு உன்னை அணைத்து
பிடித்தமானதை
உனக்கு உண்ணச் செய்து தருவாள்
பிடித்தமானதை
உனக்கு உண்ணச் செய்து தருவாள்
பிறகு சற்று வளரும் நீ
பள்ளி சென்றாய்
பன்னிரண்டு மணிக்கு
அம்மாவின் முகம்
வாசலை வாசலை பார்க்கும்
பள்ளி சென்றாய்
பன்னிரண்டு மணிக்கு
அம்மாவின் முகம்
வாசலை வாசலை பார்க்கும்
வாசலை நீ திறக்கும்போது
அவள் வாய் நிறைய புன்னகையிருக்கும்
தூசிபடிய நீ விளையாடிய சீருடைகளை
செல்லமாய் திட்டியபடி
கழற்றி கொடியில் போடுவாள்
அவள் வாய் நிறைய புன்னகையிருக்கும்
தூசிபடிய நீ விளையாடிய சீருடைகளை
செல்லமாய் திட்டியபடி
கழற்றி கொடியில் போடுவாள்
பிறகு சிலவேளை பன்னிரண்டு மணிக்கு
நீ ஏமாற்றிவிடுவாய்
தெருவுக்கு வந்து நின்று
உன்னை தேடிக்கொண்டிருப்பாள்
கடந்து போகும் பிள்ளைகளிடம்
உன்னை விசாரிப்பாள்
அவர்கள் கையை விரித்தால்
அவள் கண்கள் கலங்க ஆரம்பிக்கும்
நீ ஏமாற்றிவிடுவாய்
தெருவுக்கு வந்து நின்று
உன்னை தேடிக்கொண்டிருப்பாள்
கடந்து போகும் பிள்ளைகளிடம்
உன்னை விசாரிப்பாள்
அவர்கள் கையை விரித்தால்
அவள் கண்கள் கலங்க ஆரம்பிக்கும்
பள்ளிக்குப்போகும் வழியில் உள்ள
குட்டை குளங்கள்
வேகமாய் போகும் வாகனங்களென
அவள் மனக்கண்ணில்
கலவரத்துடன் வந்து நிற்கும்
குட்டை குளங்கள்
வேகமாய் போகும் வாகனங்களென
அவள் மனக்கண்ணில்
கலவரத்துடன் வந்து நிற்கும்
முடிவாய்
முடியையும் இழுக்காமல்
உடுத்த உடுப்போடு
உன் பள்ளி வாசலுக்கே
வந்துவிடுவாள்
நீ எதுவும் தெரியாமல்
மைதானத்தில் குதியன் குத்துவாய்
முடியையும் இழுக்காமல்
உடுத்த உடுப்போடு
உன் பள்ளி வாசலுக்கே
வந்துவிடுவாள்
நீ எதுவும் தெரியாமல்
மைதானத்தில் குதியன் குத்துவாய்
அப்படியே உன்னை திட்டியபடியே
வீடுவரை
கைப்பிடி தளராமல்
இழுத்துச் சென்று
அடித்துவிட்டு அழுதேவிடுவாள்
உன்னை பிரியச் சம்மதிக்காத
அந்த மனத்தில்
இப்போது ஆயிரம் ஈட்டிகள் குத்திய வலி
வீடுவரை
கைப்பிடி தளராமல்
இழுத்துச் சென்று
அடித்துவிட்டு அழுதேவிடுவாள்
உன்னை பிரியச் சம்மதிக்காத
அந்த மனத்தில்
இப்போது ஆயிரம் ஈட்டிகள் குத்திய வலி
நீ உன் வீட்டு மாமர ஊஞ்சலில் இல்லை
கிணற்றடியில் இல்லை
அயல்வீட்டிலும் இல்லை
படலைடியிலும் இல்லை
தெருநீளத்திலும் இல்லை
ஊருக்குள் நீ இல்லை
நீ நெடுநாட்களாய் இல்லை
கிணற்றடியில் இல்லை
அயல்வீட்டிலும் இல்லை
படலைடியிலும் இல்லை
தெருநீளத்திலும் இல்லை
ஊருக்குள் நீ இல்லை
நீ நெடுநாட்களாய் இல்லை
இந்த பூமியில் உன் அம்மாவுக்கு
எங்கு தேடுவது என்று எவரும் இதுவரை
சொல்லவே இல்லை
எங்கும் தேடுகின்றாள்
கிணற்றடியில் நின்று
ஊஞ்சலடியில் நின்று
படலைடியில் நின்று
இங்க நிக்கிறன் அம்மாவெனும் குரல்
இன்னமும் இல்லை
எங்கு தேடுவது என்று எவரும் இதுவரை
சொல்லவே இல்லை
எங்கும் தேடுகின்றாள்
கிணற்றடியில் நின்று
ஊஞ்சலடியில் நின்று
படலைடியில் நின்று
இங்க நிக்கிறன் அம்மாவெனும் குரல்
இன்னமும் இல்லை
நீ காணாமலே ஆக்கப்பட்டு விட்டாயா!
No comments:
Post a Comment