சந்தைக்குப் போனேன்
சருவப்பானைகள் ஒரு புறம்
சதா மண்டும் விசுவுக்கு
இன்றைக்கும் அரைப்பதம்
வெடியை பார்த்து
வெட்டி அடுக்கிய கரும்பு பார்த்து
வெற்றிலை பாக்கு பார்த்து
முப்பழத்தோடு
அப்பிளும் சேர்த்துப்பார்த்து
அரிசி பார்த்து
அடைக்கப்பட்ட ஆவின் பால் பார்த்து
அநேகம்
பைக்கற்றுகளில் தொங்கும்
படையல் அபிசேக பொருள் பார்த்து
பவளத்தின் முன் பார்வை நின்றது
பத்து இருபது வருடம் முன்னும்
பல கொத்தரிசிவரை
இட்டு பொங்கல் வைக்க
ஏறு வரிசைகளில் இருந்தன பானைகள்
அப்போதப்பானை முன்னே
இவள் அப்பனோ ஆத்தாளோ
குந்தியிருந்து அந்தி வரை
ஐந்தோ பத்தோ உழைத்தார்
ஒருமுறை
சோத்துப்பானையொன்றை
உள்வெளியே ஓட்டை உண்டோவென
உருட்டி உருட்டி
பார்த்தென் ஆத்தை வாங்கியது நினைவு
கந்தசட்டி கௌரி காப்புக்கென
மச்சம் புழங்காமல்
மரக்கறிக்கென குண்டானும்
கொஞ்ச சட்டிகளும்
அம்மா வாங்கியதும் தெரியும்
ஓட்டை வைத்த உலைமூடிவரை
வாட்டி எடுத்து மண்ணை
வகைவகையாய் ஆக்கியிருந்தனர்
முற்றத்தில் குந்தி
முந்தநாள் உரிச்ச தேங்காய் பொச்செடுத்து
பக்கமெலாம் உரசி கழுவி
பாவாடையிலும்
முதுகில் சொறிந்து
முகத்திலும் கரிபட
தாழ்வாரப்பந்தலில்
சட்டி பானைகள் அடுக்கியிருப்பதும்
ஓர் அழயாய் இருந்தது முன்
வீட்டுக்குள் பிறகு
வெள்ளி வேறு உலோகங்களில்
கப்பன்ட் சோசர்களும்
கண்ணாடி கிளாசுகளும்
சட்டி பானை மூடிகள்
சமையலுக்கு வந்து
மரப் புட்டுக்குழலை கூட
தூக்கி எறிந்துவிட்டு
இரும்பு செம்புகளில்
எல்லாம் வாங்கப் பழகிய பின்
விட்டுக்கொடுக்காமல்
இந்த மண்ணில் செய்யும்
மறக்காத அந்த மண்பானை காலத்தை
மனதுக்கு ஊட்டும் பவளத்தை
பொங்கலுக்கு முதல்
இன்று மனம் வாழ்த்தும்
Subscribe to:
Post Comments (Atom)
பிரசாதமே!!
கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும் மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...
-
எங்கள் வீட்டில் இருந்து கிழக்காக புறப்படும்போது முதலில் முடியப்பர் வீடு ஆழ்வார் பிள்ளை வீடு வரை போகும் ஒரு குச்சொழுங்கை இடையில் குளியாப்பிட்...
-
போர் கால நினைவுகள் நிறைய உண்டு. போர் முடிந்து இப்போது பதின் மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. போருக்கு பின்னரான ஆரம்ப காலங்கள் இப்போது நினைவுகள...
-
கோழிக்கு தவிடு வாங்க குஞ்சு போய் வா என்பாள் அம்மா ஐம்பது சதம் இலஞ்சம் கேட்பேன் ஆக்கினை தாங்கேலாமல் ஆமோதிப்பாள் கோணிப்பையுடன் இராசையர் கடை தா...
No comments:
Post a Comment