கந்தசாமிக்கின்று கலியாணநாள்
பெண்டாட்டியை ஒரு தடவை
மண்டை கடைக் கண்ணால்
மனதார பார்க்கிறார்
கொண்டை அவிழ்ந்தபடி
குசினிக்குள் அவளேதோ
வெண்டிக்காய் வெங்காயமோ
வெட்டிக்கொண்டிருக்கிறாள்
தொண்டைக்குள் வரும் வார்த்தை
என்னப்பா இண்டைக்கு
எந்நாள் தெரியுமோவென
முன்னுக்கே தான் சொல்லி
அவள் முகத்தில்
அன்றைக்கோர் நாள் முதலிரவில்
முகிழ்த்த புன்னகையை
சொண்டுக்குள் மலர காண
முழு விருப்பம் ஆன போதும்
என்றைக்கும் போலேவே
இயல்பாய் இருப்பதாக
ஒன்றும் பேசாமல்
ஓர் ஊமையாய் ஆகிறார்
உள்ளுக்குள் ஒரு காலம்
நில்லென சொன்னாலும்
நிறுத்தாமல் ஓட தொடங்கிற்று
உண்மையாய் சொன்னால் என்ன
சுமாராகத்தான் இருந்தாளவள்
ஸ்ரீ தேவி ரசிகன் கந்தசாமி
இடுப்பு உதடு கூந்தலென
அடுக்கடுக்காய் ரசித்து
கொடுப்புக்குள்
தனக்குள்ளே சிரிப்பவர்
பாதி இரவுகள் பருவ வயதில்
ஸ்ரீ தேவி படம் பார்த்து
வாடிப் போயிருந்து
பள்ளி வரவும் குறைந்து
தாடியும் கூட
வளர்த்து பார்த்தவர்
தேடி ஒரு அழகிக்கு
அவர் தவம் கிடந்தாலும்
திருவாட்டியாய்
இவளே அமையுமென
அவர் விதி பலன் போல
கதிரி தம்பியின்
கடைசிப் பெட்டையாய்
கொஞ்சம் கறுப்புமாய்
வதிரி அடியுடையாளாய்
கதிரியின்
காலுக்குள் வைத்து
புதிராய் விளையும் வரை
பொத்திப்பொத்தி வளர்த்து
சித்திரனின் பேச்சு காலால்
உச்சில் அம்மன் கோயிலில்
ஒப்பேறிய கலியாணம்
பிற்பாடு
ஒரு பிள்ளை ஈன்று
அடுத்ததும் பெறுமாதம் காண
நாள் காணும் காலங்களில்
இவளே தன் பேரழகி என
கந்தரின் அடி மனம் காவடி ஆடிற்று
இது இருபத்தைந்தாம் ஆண்டு
இல்லற நாள்
அடிப்பெட்டியில் வைத்து
அடிக்கடி எடுத்தும் பார்த்து
மடிப்புக்கள் இடையில்
பூச்சி முட்டை உருண்டை வைத்து
பத்திரமாய்
பல பத்தாண்டு காத்த
கலியாண நாளில்
அவள் கட்டிய பட்டு சேலை
கொடிய போர் முள்ளி வாய்க்காலில்
நாலைந்து துண்டாக்கி
மண் மூட்டை கட்டும்
மண் நிலயாக
கனவோடு வளர்த்த
கடைக்குட்டி பெடியன்
எறிகணை பட்டு
உயிர் முடிந்து போக
கலியாண வேட்டியில்
கதறி விழுந்து கந்தசாமி
பிள்ளையின் உடல் சுற்றி
பிரேத பெட்டியும் இன்றி
மணலை கிண்டி
தன் மகவை தாட்டார்
இழந்து துயரில்
தாயிவள் மயங்கி கிடந்தாள்
கண்ணீரை துடைத்தபடி
நினைவை கிளப்பி
அவள் நிம்மதி கெடுக்காமல்
வளவின் பின் பக்கம் போய்
வாழைகளை பார்க்கிறார்
குட்டிகள் பலதள்ளி
பொத்தியும் குலையுமாய்
பூரித்து நிற்கிறது அவை
பெண்டாட்டியை ஒரு தடவை
மண்டை கடைக் கண்ணால்
மனதார பார்க்கிறார்
கொண்டை அவிழ்ந்தபடி
குசினிக்குள் அவளேதோ
வெண்டிக்காய் வெங்காயமோ
வெட்டிக்கொண்டிருக்கிறாள்
தொண்டைக்குள் வரும் வார்த்தை
என்னப்பா இண்டைக்கு
எந்நாள் தெரியுமோவென
முன்னுக்கே தான் சொல்லி
அவள் முகத்தில்
அன்றைக்கோர் நாள் முதலிரவில்
முகிழ்த்த புன்னகையை
சொண்டுக்குள் மலர காண
முழு விருப்பம் ஆன போதும்
என்றைக்கும் போலேவே
இயல்பாய் இருப்பதாக
ஒன்றும் பேசாமல்
ஓர் ஊமையாய் ஆகிறார்
உள்ளுக்குள் ஒரு காலம்
நில்லென சொன்னாலும்
நிறுத்தாமல் ஓட தொடங்கிற்று
உண்மையாய் சொன்னால் என்ன
சுமாராகத்தான் இருந்தாளவள்
ஸ்ரீ தேவி ரசிகன் கந்தசாமி
இடுப்பு உதடு கூந்தலென
அடுக்கடுக்காய் ரசித்து
கொடுப்புக்குள்
தனக்குள்ளே சிரிப்பவர்
பாதி இரவுகள் பருவ வயதில்
ஸ்ரீ தேவி படம் பார்த்து
வாடிப் போயிருந்து
பள்ளி வரவும் குறைந்து
தாடியும் கூட
வளர்த்து பார்த்தவர்
தேடி ஒரு அழகிக்கு
அவர் தவம் கிடந்தாலும்
திருவாட்டியாய்
இவளே அமையுமென
அவர் விதி பலன் போல
கதிரி தம்பியின்
கடைசிப் பெட்டையாய்
கொஞ்சம் கறுப்புமாய்
வதிரி அடியுடையாளாய்
கதிரியின்
காலுக்குள் வைத்து
புதிராய் விளையும் வரை
பொத்திப்பொத்தி வளர்த்து
சித்திரனின் பேச்சு காலால்
உச்சில் அம்மன் கோயிலில்
ஒப்பேறிய கலியாணம்
பிற்பாடு
ஒரு பிள்ளை ஈன்று
அடுத்ததும் பெறுமாதம் காண
நாள் காணும் காலங்களில்
இவளே தன் பேரழகி என
கந்தரின் அடி மனம் காவடி ஆடிற்று
இது இருபத்தைந்தாம் ஆண்டு
இல்லற நாள்
அடிப்பெட்டியில் வைத்து
அடிக்கடி எடுத்தும் பார்த்து
மடிப்புக்கள் இடையில்
பூச்சி முட்டை உருண்டை வைத்து
பத்திரமாய்
பல பத்தாண்டு காத்த
கலியாண நாளில்
அவள் கட்டிய பட்டு சேலை
கொடிய போர் முள்ளி வாய்க்காலில்
நாலைந்து துண்டாக்கி
மண் மூட்டை கட்டும்
மண் நிலயாக
கனவோடு வளர்த்த
கடைக்குட்டி பெடியன்
எறிகணை பட்டு
உயிர் முடிந்து போக
கலியாண வேட்டியில்
கதறி விழுந்து கந்தசாமி
பிள்ளையின் உடல் சுற்றி
பிரேத பெட்டியும் இன்றி
மணலை கிண்டி
தன் மகவை தாட்டார்
இழந்து துயரில்
தாயிவள் மயங்கி கிடந்தாள்
கண்ணீரை துடைத்தபடி
நினைவை கிளப்பி
அவள் நிம்மதி கெடுக்காமல்
வளவின் பின் பக்கம் போய்
வாழைகளை பார்க்கிறார்
குட்டிகள் பலதள்ளி
பொத்தியும் குலையுமாய்
பூரித்து நிற்கிறது அவை
No comments:
Post a Comment