தோழர் சே ஒருமுறை பேசும்போது சோசலிசம் ஒரு புதிய மனிதனை உருவாக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.விடுதலைப்போராளிகளையும் விடுதலைப்போராட்டங்களையும் நினைத்துப்பார்க்கும்போது ஆச்சரியங்கள் அதிகமுண்டு.அத்தகைய ஆச்சரியங்களை நிகழ்த்துவதற்கு அவர்களை கட்டிவைத்திருந்த அவர்களின் உணர்ச்சிகளை கட்டியெழுப்பிய கொள்கைகள் அடிப்படையாக இருக்கின்றன.விடுதலைப்போராட்டங்களின் வெற்றி ஆயுதங்களில் அல்ல வெகுசனங்களின் கைகளிலேயே தங்க உள்ளது என்பதன் அர்த்தம் அந்த வெகுசனங்களை கட்டிவைத்திருக்கக்கூடிய கொள்கைச்சக்தியின் கைகளிலேயே தங்க உள்ளது என்பதாகின்றது.வெறும் மூங்கில் குச்சிகளையும் ஈட்டிகளையும் மட்டுமே வைத்துக்கொண்டு. வியட்நாம் விடுலையை வென்றெடுத்தது எப்படி என்பதற்கு விடைதேடுகின்றபோது அவர்களை கட்டிவைத்திருந்த கொள்கையின் பிரமாண்டம் தோன்றுகின்றது.ஈழத்தில் அவ்வாறான கொள்கையின் அடிப்படையில் விடுதலைப்போராட்டம் கட்டிவைக்கப்படவில்லையோ என ஈழத்தில் போருக்கு பின்னரான நடப்பு விடயங்கள்
எண்ணவைக்கின்றது.
ஈழத்தில் நான் பள்ளி பருவ காலத்தில் பல நூலகங்களில் ருஸ்ய சஞ்சிகைகள் சோசலிச லெனினிச மாக்சிச நூல்கள் வெளியீடுகளை அதிகம் பார்க்கமுடிந்தது.மாஸ்க்கோ நகரத்தை வரை படம் எனக்கு அறிமுகம் செய்யவில்லை ஊர் நூலகத்தில் ஒரு சஞ்சிகைதான் முதலில் அறிமுகம் செய்தது பின்னாளில் அத்தகைய நூல்களின் வாசிப்பு அரிதாகியதுடன் அத்தகைய நூல்களை நூலகங்களில் காண்பதற்கு பதிலாக மர்லின் மன்றோவின் தொடர்களையும் இடிஅமீனின் தொடர்களையும் இந்திய சினிமா கிசுகிசக்களை தாங்கி வரும் பத்திரிகைகளையும் பிரியாவையுமே அதிகம் பார்க்கக்கிடைத்தது.குறிப்பிட்ட ஒரு சாரார்கள் மட்டும் நூலகங்களின் மூலைக்குள்ளும் பொத்தக சாலைகளின் மூலைகளுக்குள்ளும் லெனினிசம் மாக்சிசம் சோசலிசத்தை தேடிக்கொண்டிருந்தார்கள்.புலிகளின் உத்தியோக பூர்வ வெளியீடுகளிலும் இத்தகைய வல்லரசு நாடுகளினதும் மற்றும் அத்தகைய கொள்கையின் அடிப்படையில் விடுதலைக்காக போராடி வென்ற நாடுகளினதும் கதைகள் உரைகள் தத்துவங்கள் வெளியீடுகளின் மொழி பெயர்ப்புக்களை பார்க்கக் கிடைத்தது.ஆயினும் இத்தகைய வலிமை மிகுந்த வெற்றி தரும் இஸங்கள் எந்த அளவுக்கு ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் செயல்வடிவங்களுக்குள்ளாகி மாற்றங்களை கொண்டுவந்திருக்கின்றது என்பதை இன்றைய யதாhர்த்தத்தோடு ஒப்பிட்டு தேடுகின்றபோது நிறைய கேள்விகளும் சலிப்புக்களும் விடையாகின்றன.
ஈழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பத்தில் புலிகள் உட்பட்ட இயக்கங்களின் அடிப்படை வாசங்களில் சோசலிச தமிழீழம் ஆழப்பதியுமாறு உச்சரிக்கப்பட்டபோதும்.தோழர் சே சொன்னதுபோல சோசலிசம் ஈழத்தமிழர்களுக்குள் புதிய மனிதர்களை உருவாக்குதில் தோல்வியே கண்டுள்ளது.விடுதலைப்போராட்டத்தை வென்று உலகத்தில் அங்கீகாரம் பெறப்படவேண்டுமாயின் உலகின் வல்லரசுகள் எத்தகைய இஸங்களின் அடிப்படையில் இயங்குகின்றது என்பதை உணர்ந்து அச்சார்ப்பான அமைப்பாக ஈழத்தின் விடுதலைக்கான போராட்ட அமைப்பை கட்டி எழுப்புவது புத்திசாலித்தனமானது என்பதை பிரபாகரன் உணர்ந்ததன் அடிப்படையில் ஒரு இயக்கத்தை கட்டி எழுப்ப எண்ணியபோதும் அது அவருக்கு பயணத்தில் அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை.வெகுசன ஆயுதம் என்ற ஆயுதம் என்ற அடிப்படையில் மிகவும் பலவீன நிலையிலேயே ஈழத்தமிழர் போராட்டம் இருந்துள்ளது.பிரபாகரன் உண்மையில் எதிரிகளால் தோற்கடிக்கப்படவில்லை.அவர் உண்மையின் தமிழர்களால்தான் தோற்கடிக்கப்பட்டார்.தமிழர்களிடம் காலம்காலமாக புரையோடிப்போயுள்ள இஸங்கள் தனங்களால் கலாச்சார முறைமைகளால் அவர் தோற்கடிக்கப்பட்டார்.ஈழத்தமிழர்களால் வெறும் மூங்கில் குச்சுகள் ஈட்டிகளை வைத்து பலம்மிக்க எதிரிகளை எதிர்கொள்ளமுடியாமைக்கு காரணம் எதிரிகள் அல்ல.தமிழர்களுக்குள் இருந்த இஸங்கள்.
எமது இஸங்கள் உலகை தீர்மானிக்கும் சக்திகளை கொண்டுள்ள ஒரு வல்லரசுகளின் இஸங்களோடு சார்ந்திருக்கக்கூடிய நிலையில் இருந்திருப்பின் எமது சிறுகுரல் பெரும் குரலாக மாற்றப்பட்டிருக்கும்.துரதிஸ்டம் இறுதியில் முள்ளிவாய்க்காலில் எமது பெருங்குரலும் உலகின் முற்றத்தில் சிறுமுனகலாகிக்கிடக்கின்றது.அதீத அர்ப்பணிப்புக்களுக்குத் தயாரான போராளிகள் இருந்தபோதும் அதன் மூலம் வெற்றிகள் கிடைத்தபோதும் வெகுசன வடிவமாக மாற்றம்பெறாமல்போன ஈழத்தமிழர்களின் விடுதலைப்பயணத்துக்கான காரணங்களை தேடி அறிந்து பயணித்தல் அவசியம்.பறவைகள் விழிக்கும்போது விழித்து நட்சத்திரங்கள் தோன்றும்போது தூங்காத பிரபாகரன் போன்ற தலைமைகள் உயிர்களை கொடுத்த தியாகிகள் கிடைத்த போதும் ஏன் வெல்ல முடியவில்லை.காரணம் ஈழத்தமிழர்களே.ஆயுதப்பேராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தால் அல்லது அழிக்கப்பட்டிருந்தால் அது ஈழத்தமிழர்களுக்கான பாரிய வெற்றி.வெகுசன ஆயுதம் தக்கவைக்கப்பட்டிருக்கின்றது.இந்த வெகுசனம் ஆயுதம் இயங்குவதற்கு அயுதப்போராட்ட காலத்தில் கட்டமைக்கப்பட்ட உலகம் சார்ந்த கொள்கை நிலைப்பாடு அவசியம்.அது எந்த இஸத்தின் அடிப்படையிலானது என்பதை நடப்பு ஈழத்தின் வெகுசன ஆயுதம் ஒரு பலவீனமான நிலையிலேயே காட்டுகின்றது அல்லது இயங்குகின்றது.ஈழவிடுதலைக்கான வெகுசனத்தை கட்டிப்போடக்கூடிய இஸத்தை கொண்ட ஒரு தேசிய சக்தி ஒரு அமைப்பாக எம்மிடம் இல்லை.மாறாக பதவிகளை தக்கவைத்துக்கொள்ளும் அமைப்புகளாகவே காணப்படுகின்றது.பதவிகளை பெற்றுக்கொள்ளும் மிகவும் சாதாரணமான அரசியல் நிலைப்பாடே தற்பொழுது ஈழத்தமிழர்களிடம் உள்ளது.ஈழத்தமிழர்களுக்கான பேரியக்கம் தேர்தல் பிரதிநிதித்துவம் ஆகத்தான் உருவாக்கப்படவேண்டும் என்பதில்லை.வெகுசனத்தை கட்டுக்குள் கொண்டுவரும் ஒரு பேரியக்கம்.ஒரு சர்வசன வாக்கெடுப்பு தேர்தலுக்கு மட்டுமே வெகுசனத்தை தயார் செய்யவேண்டும்.
கியூபா விடுதலை அடைந்தபோதும் போராட்ட காலத்திலும் அதன் நிலவளங்களை பயன்படுத்த முழுமையான மனித உழைப்பு ஈடுபடுத்தப்பட்டது.சுயபொருளாதாரத்தை கட்டியெழுப்ப அத்தகைய முழுமையான மனித உழைப்பு அவசியம்.ஆயுத வல்லரசு நிலைகளில் இருந்து பொருளாதார வல்லரசாக உலக ஒழுங்கு போய்க்கொண்டிருக்கின்றபோது போரினால் மிகவும் பொருளாதார வறுமைப்பட்டும் போயுள்ள ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தை எவ்வாறு நகர்த்திச்செல்வது.ஈழத்தமிழர் நிலத்தில் முதலீடுகள் அவசியம்.அந்த முதலீகளை யார் செய்வது.அந்த முதலீடுகள் முழுமையான மனித உழைப்புக்கும் மனித வளப்பயன்பாட்டுக்குமாக அமையவேண்டும.முதலீடுகளும் தொழில்களும் எமது விடுதலைப்போராட்டத்தில் அடிப்படை இலக்குகள் நோக்கிய பயணத்திற்கு துணையிருப்பதாக அதற்கான திட்டங்கள் என்ன என்பதை எல்லாம் தீட்டுவதற்கு செயல்படுத்துவதற்கும் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் பூகோள மயமாக்கல் சார்ந்த ஒரு கொள்கை அல்லது இஸம் அவசரமாக அவசியம்.இத்தகைய நிலைகளை வென்றெடுக்க வெகுசனமயமாக்கத்தை உடைய ஒரு பேரியக்கம் வேண்டும்
தீர்ப்பு
2015ஆண்டு என்று நினைக்கின்றேன்.வன்னியில் ஒரு தேர்தல் பிரச்சார மேடையில் மிகத்தீவிரமாக பேசிக்கொண்டிருந்தேன்.அது இரவு தேர்தல் பிரச்சாரக் கூட்டம்.வன்னியின் ஒரு கிராமத்து மைதானத்தில் பேசினேன்.நிறைந்த மக்கள்.வழமைபோலவே விடுதலைப்போராட்ட வரலாறு அதற்கு முந்திய தமிழர்கள் வரலாறு என்று தமிழ்த் தேசியத்துக்கு வலுச்சேர்;க்கும் விடயங்களை பேச்சில் அடுக்கிறேன்.இன்னொரு புறத்தில் எங்கள் மனங்களில் பதியவைக்கப்பட்ட துரோகிகள் எனப்படுபவர்களின் பெயர்களை குறிப்பிட்டு
ஆக்ரோசமாக பேசினேன்.அத்துரோகிகளில் பலர் உயிரோடு இல்லாதவர்கள்.கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நிமிடங்கள் பேசிய பின்பு மேடையில் இருந்து இறங்கி பின்னே பிரமுகர்களோடு அமர்ந்தபோது ஒரு இருபத்திரண்டு
வயது மதிக்கத்தக்க இளைஞன் என்னை நெருங்கி வந்து என்னை மரியாதையோடு அழைத்துச்சென்று எனக்கு சொன்னான்.
'உங்கள் பேச்சு நன்றாக இருந்தது.ஆனால் நீங்கள் குறிப்பிட்ட துரோகிகள் ஒருவரின் பிள்ளைகள் இந்தக்கிராமத்தில்தான் வாழ்கிறார்கள்.அவர்கள் படிக்கின்றார்கள்.பள்ளிபோகும் பருவமுடையவர்கள்.அவர்களின் மனம் வேதனைப்படும் என்றான்''
எனக்கு மனங்கலங்கிப்போய்விட்டது.நான் ஒரு மிக்கபெரிய தவறை செய்ததை உணர்ந்தேன்.இதுவரை நான் அதற்காக என் மனதுக்குள் மன்னிப்புக்கேட்டுக்கொண்டிருக்கின்றேன்.அன்றில் இருந்து துரோகிகள் என்று எங்கள் மனதில் தெரிந்து தெரியாமலோ பதியப்பட்டவர்களின் பெயர்களை பொது இடங்களில் உச்சரிப்பதில்லை.இது பிள்ளைகளின் காலம் அவர்களின் மனம் புண்பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றேன். துரோகிகள் என நாம் அறிந்து கொண்ட பலரை மீண்டும் என மனது எனும் விசாரணைக்கூண்டில் நிறுத்தி பக்கச்சார்பற்று காலத்தை சாட்சியாக வைத்து படிப்பினையை நீதி தேவதையாக கொண்டு விசாரணை செய்து தீர்ப்புக்களை எழுத விளைகின்றேன்.
வன்னியின் போர்க்காலத்தில் பல அமைப்புக்கள் இருந்தன சில பொது அமைப்புக்கள் சில தனியார் அமைப்புக்கள்.பல வெளிப்படையாக தெரியும் புலிகள் இயக்க அமைப்புக்கள் துறைகள்.இன்னொரு புறத்தில் பொது அமைப்புகள் அல்லது தொண்டு நிறுவனங்கள் என்ற தோற்றத்துடன் முற்றிலும் புலிகளின் தீவிர பணியில் ஒன்றை செய்யும் அலகாகவும் சில இருந்தன.இதில் பல மக்கள் அறியாதவை.அதில் ஒன்றின் பணி என்னவெனில் புலிகளால் தண்டனை வழங்கப்பட்டவர்களின் குடும்பங்களை கண்காணிப்பது.கண்காணிப்பது என்பதைவிட கவனிப்பது.அக்குடும்பங்களின் வாழ்வாதாரம் அப்பிள்ளைகளின் கல்வி தேவைகள் எதிர்காலம் என்பன சொல்லப்போனால் ஒரு அப்பாநிலையில் நின்றும் ஒரு அம்மா நிலையில் நின்றும் அதை செய்ய வேண்டிய கடப்பாடு இயக்கத்துக்கு இருந்தது.எதிரிகளை துரோகிகளை எமது மக்களுக்குள் உருவாக்ககூடாது என்பதை இயக்கம் உணரத்தலைப்பட்டது.துரோகிகளை எதிரிகளை உருவாக்குவது எதிர்காலத்தில் எங்கோ புள்ளியில் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை புலிகள் உணரத்தலைப்பட்டார்கள்.பலருக்கு தெரியாத யதார்த்தங்கள் இவை.துரோகங்கள் பற்றிய மீள் விசாரணையும் எனது தீர்ப்புக்களும் தொடரும்
No comments:
Post a Comment