இரவு பற்றி
அம்மா எனக்கு சொன்னவை
பயங்கரமானவை
அதில் அமானுஸ்யங்கள் இல்லை
அம்மா காட்டிய இரவின் தடங்கள்
கால்கள் கைகள் கண்கள்
என்னுடையதை போலவே
அம்மா
அதை மிருகங்கள் உடையதென சொன்னார்
தூரத்தில் கேட்டு
நெருங்கும் ஊர்தி இரைச்சல்களில்
அம்மாவின் பார்வையில் படபடப்பில
காட்டில் உறங்குவதாய் உணர்ந்தேன்
எனது இரவை இறுதிவரை
நட்சத்திரங்களாலும் நிலவாலும்
அழகுபடுத்த கைகூடாமல்
கண்ணை மூடிக்கொண்டாள் அம்மா
அம்மாவுக்கு
நான் படைக்கக் கூடிய இரவிலும்
ஊதிபத்தி வாசனையின் பின்
மிருகங்களின் மொச்சை
தீராத இரவொன்று என்னோடு
No comments:
Post a Comment