Tuesday, October 23, 2018

முதலில் உன்னை- தியின் கதை,


இன்றெல்லாம் அன்று நீ தெடுந்தூரம் சென்றுவிட்டாய்
கூவி அழைத்தோம்
கந்தனின் கோபுரக்கலசங்கள்
பெரியகோவிலின் முகடுகள்
நெடுந்தூரம்வரை தேடிப்பார்த்தன
பறவைகளிடம் சொல்லிவிட்டோம்
காற்றிடம் ஒரு கண்ணீர் மகஜர் கொடுத்தனுப்பினோம்
வானத்தை நோக்கி கையேந்தினோம்
உனது பயணத்தை நீ நிறுத்தவில்லை
வாரடித்து ஓடிய நதி
பருந்திடம் பறிகொடுத்த
தாய்க்கோழியின் துயரமாய் நீள்கின்றது
உருகி வழிந்து மெழுகி திரியும்
எரிந்து முடிகிற கற்பூரமும்
முதலில் உன்னை
அடுத்து ஜீசஸ் சிவனை
உன்னை கடவுளாக்க தெரியவில்லை எங்களுக்கு
அத்தனை நெருக்கமாய் கலந்திருக்கிறாய்
எங்கள் ஆற்றாமையை அறிந்துகொண்டிருப்பாய்
எங்கள் வேண்டுதல்கள் பலித்த இடத்தில்
உன்னை சிரித்தபடி ஆராதிப்போம்
நீ கீறப்பட்டிருக்கிறாய் எம்மில்
அணில் முதுகில் வரிகள்போல
உனது நினைவுகளால்
பறட்டை காடுகளின்
நெருஞ்சி முட்களும் தைப்பதில்லை
எத்திசையில் நீ நீள்துயில் கொண்டாயோ
அத்திசையே எங்கள் தலைவாசல்
வெறும் கைத்தடியாய் பிடிமானமற்று
தடுமாறும் அடையாளமாய் கிடந்ததை
நீ மண்ணுக்கும் விண்ணுக்குமாக
ஒரு வெள்ளியாய் ஒளிரவைத்தாய்
யார் தீண்டத்தகாதவர்
உன் நினைவுகளை தொடாதவர்
அக்கிரகாரங்களுக்குள் ஒளித்துவைக்கமுடியாது உன்னை
அக்கனவு
நல்லூர் திருவிழாவின் மணிக்கடை பலூன்போல
சின்னப்பையனால் ஊதி உடைக்கப்படும்
உனது வார்த்தைகள்
எங்கள் அம்புக்கூட்டில் விழுந்திருக்கிறது
பல சிட்டுக்குருவியோடு சேர்ந்து பறந்துகொண்டிருக்கின்றது
உன் பிரிவு ஆற்றாமையைத்தருகிறதா
இல்லை ஆற்றலை தருகிறது
அந்த ஆற்றலாலும்
உனது இழப்பில் துயரத்தை அழமுடியவில்லை

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...