அமைதிக்கு
இலக்கணம்
அடுத்த தெருவறியா பக்குவம்
குனிந்த நடை
குதிக்கால்வரை உடை
மெலிந்த மேனி
மேளதாளமிலா நடையென
நேற்றுவரை எம் தெரு
அறிந்திருந்த நீ
கொட்டிவிட்டாய் குளமாய்
சேட்டை விட்ட பெடியன்முன்
சேர்த்து வைத்து இன்று
இத்தனை வார்த்தைகளா உனக்குள்
அநேகம்
அச்சில் வார்த்து
அப்பவே இறக்கியது
திடுக்கிட்டுவிட்டது தெரு
எனக்குள் சிரித்துவிட்டேன் நான்
வாயாடி!!
No comments:
Post a Comment