Friday, October 19, 2018

எனது நிலம்-பொன்.காந்தன்




எனது நிலம்
அதை நான் இப்போது
கல்லறைகளின் பூமி என அழைக்கிறேன்
நான் இதை முன்னொரு பொழுதில்
ரோஜாப் படுக்கையாக உணர்ந்ததுண்டு
ஆதியான நாட்களில்
காதலின் வாசலென இன்புற்றவர் அழைத்தனர்
தியாகங்களின்திருமுகங்களை இங்கு பார்த்தவர்கள்
ஆச்சரியக்குறியால் இதை எழுதிப்பார்த்துள்ளனர்
எல்லாப் பருவங்களிலும்
ஏதோ ஒரு கனியை
யார்யாரோ பறித்துச்செல்ல
மகிழும் நிலமாகஇருந்திருக்கிறது
கோபத்தின் வடிவமாக இருந்தபோது
மெல்லிய என் அழகிய தேவதையின் ஆபரணங்கள் ஈட்டியானதை பார்த்து
பெயரிடமுடியாமல் தவித்துள்ளேன்
கல்லறைகளின் நிலத்தில் வாழ்கிறேன்
வாழ்வதற்கான என் நிலத்துக்காக...

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...