Friday, October 19, 2018

பிக்பொஸ்-பொன்.காந்தன்




நினைத்துப் பார்த்தேன்
மறைந்த என் அப்பாவும்
ஒரு பிக்பொஸ்தான்
அவர் அடிக்கடி சொல்வார்
எல்லாம் பாத்துகொண்டுதான்இருக்கிறேன்
எல்லாம் சேர்த்து வச்சு தருவேன் என்பார்
அப்படித்தான் ஒருநாள்
புத்தகங்களோடு
சந்தியில் சிநேகிதங்களுடன்
வாலை குமரிகளுக்கு
வளைந்து நின்றபோது
பிக்பொஸ் கண்டு விட்டார்
வீட்டில்
எல்லாம் சேர்த்து வைத்து
தந்தும் விட்டார்
அநேகமாக எல்லார் வாழ்விலும்
முதல் பிக்பொஸ் அப்பாதான்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...