Friday, October 19, 2018

பேராற்றின் எல்லை-பொன்.காந்தன்




இப்படியே
மகாவலி நீளுமெனில்
இப்படியே
எம் நிலத்தில்
விகாரைகளும் வெள்ளரசுகளும்
முளைக்குமெனில்
இப்படியே
காணாமல் ஆக்கப்பட்டோர்
அவ்வாறே ஆக்கப்பட்டோராகவே
இருப்பாரெனில்
இப்படியே சிறைகளில்
அரசியல் கைதிகளாய்
தமிழர் வாழ்க்கை தொலையுமெனில்
இப்படியே எங்கள் ஊர்களுக்குள்
முகாம்களும் துப்பாக்கிகளும்
நிரந்தரமாய் வேரூன்றுமெனில்
இப்படியே  வடக்கும் கிழக்கும்
கூறாக்கப்படுமெனில்
இப்படியே
எம் கடலும் வளமும் சுரண்ட படுமெனில்
இப்படியே சிங்களத்தில்
இனவாதம் வளருமெனில்
இப்படியே எங்கள்
நில உரிமை தன்னாட்சி உரிமை
தரப்படாமல் ஏமாற்றபடுவோமெனில்
இப்படியே
இன படுகொலைக்கு நீதி இன்றி
தர்மம் புதைக்கபடுமெனில்
இப்படியே எம் மீது
ஒரு நிழல் யுத்தம் நிகழுமெனில்
இப்படியே
வலிகளில் இருந்து மீளும்
ஒரு இனத்தின் அமைதி
பலவீனமாக பார்க்கபடுமெனில்
பிரபாகரன் வரமாட்டார்
அவர் தோன்றவும் மாட்டார்
அவரின் கடமை போதுமானதாயிற்று
இன்றில்லை
காயங்களாலும் வலிகளாலும்
நினைவு ஏக்கங்களாலும்
எம் வாழ்க்கை சூழப்பட்டுள்ளது உண்மைதான்
பொறுமையாய் இருப்போம்
நாளை இல்லை
போரின் கொடூர நாட்கள்
துப்பாக்கிகள் மீது
தீரா அருவருப்பை தந்துள்ளது உண்மைதான்
இன்னும் பொறுமை காப்போம்
பிறகு
யாரோ ஒரு சுப்பிரமணியமோ
பெருமாளோ கோமளமோ
என் மண்ணை மீட்க
புறப்படுவதை யாராலும்
தடுத்திடல் முடியாது
அதில் ஒன்றுக்கு
ஓராயிரம் நியாயம் இருக்கும்
எல்லா பாடங்களும் உணர்ந்த
ஒரு பெரும் பேராறாய்
அப்புறப்பாடு இருக்கும்
அப்பேராறின் வியாபகத்தை
இப்போது என்னால் எல்லையிட முடியவில்லை
அப்பேராறில் சிங்களர் முழுவதுமாய்
மூழ்குதல் நிகழும்
பாவம் அதில் அப்பாவிகளும்
தம் முன்னவர் விட்ட தவறுக்கான
தண்டனையாய் அனுபவிப்பர்
தமிழரை ஏமாற்றிய தமிழரும் மூழ்குவர்
ஒன்றுக்கு ஒரு கோடி நியாயத்துடன்
ஒரு ஆற்று பெருக்கு நிகழ்ந்தே தீரும்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...