Friday, October 19, 2018

அம்பா- பொன்.காந்தன்


அம்பா

துகிலுரியப்பட்ட கரையில்
மகரந்தமற்று
மலர்கள் பூத்திருக்கும்
இன்னும்
கொங்கை பிறாண்டிய
நகங்களோடலையும்
கால்களின் கீழ்
தொட்டாச்சிணுங்கி முளைக்கும்
நெருஞ்சி தைக்கும்
சூரை ஆடைகளில் கொழுவி
கைகளில் கீறும்

முத்துக்களை சிப்பி மூட
சிப்பிகளை பாறைகள் மூட
பாறைகளை எரிமலை மூட
இளவரசிகளை விருந்தாக்கிய
கொடுங்கோலர் மீது
வன்மம் கொப்பளித்திருக்கும்

காட்டெருமைகளின்
முறுகித்திரண்ட கொம்பென
எல்லா பூஞ்செடிகளின் மீதும்
கிளைத்திருக்கும்
நேற்றைய
அலைகரையின் பேரோலம்

இளவரசிகளை
இழுத்துச் சென்று
இழித்துரைத்த
கல் புணரிகளின் மீது
அம்பா காறி உமிழ்ந்து கொட்டும்
எமது பாடல்
கரைவலையாலிழுக்கும்
ஒரு காலத்தழகை

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...