Friday, October 19, 2018

மிக புதிதாய் அன்றேல் மிக பழையதாய்-பொன்.காந்தன்





சாலைகளில் போகும்போது
அநேகமாக 
எல்லா விளம்பரங்களிலும் காணப்படும்
குறைந்த விலை
நம்பிக்கை வட்டி வீதம்
தவணை முறையில்
இப்படி ஏதேனுமா

கதவுகளை திறக்கும் போது
அகேமாக
கண்களில்படும்
அனுமதி பெற்று
பாதணிகளுடன்
குளிரூட்டப்பட்ட
தள்ளவும்
கவுஸ்புல்
இப்படி  ஏதேனுமா

இருக்கையில் அமரும்போது
அநேகமாக கேட்கும்
கூல் றிங்ஸ் கொபி
கோக் பெப்சி
இருபத்திரண்டு கரட்
இம்போற்றன்ட்
ஜிபி டபிள் சிம் ஸ்பீட் வைபை
தள்ளுபடி
நூற்றைம்பது இருநூற்றைம்பது சிசி
கொட்டன் டெனிம் சில்க் வூல் லெதர்
இப்படி ஏதேனுமா

மெசெஞ்சரை திறக்கும்போது
வந்துவிழும்
பிளீஸ்
பார்த்தவுடன் பத்துபேருக்கு
நல்ல சேதி
ராமஜெயம்
ஸவீற்டிறீம்ஸ் செல்லம்
புறோ கக் லைக்கிற்
கொன்டன்ற் நொட் எவலெபிள்;
இப்படி ஏதேனுமா

வாடிக்கையாளர் சேவைகளில்
பழகிப்போன
தமிழில் தொடர்வதற்கு
வேண்டுகோள் நிறைவேற்றப்படுகின்றது
சுருக்கமான வங்கிக்கூற்று
மேலதிக சேவைகளுக்கு
மன்னிக்கவேண்டும்
இப்படி ஏதேனும்

இதைவிட
அன்பே உன் கண்கள்
என்ன சொல்லப்போகிறது மிகபுதிதாய்
அன்றி மிக பழையதாய்
பார்த்தபடியே இருக்கின்றேன்!!
















No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...