Friday, October 19, 2018

பெரிய வெள்ளி-பொன்.காந்தன்




உன்னை அறைந்தார்கள்
இன்றென் நெஞ்சிலும்
தைக்கும்படி
ஐயனே இயேசு
உனது வலி பெரிது
உனது காயம் ஆறாதது
சிந்தியபடியே இன்னும் குருதி

இன்னும் என் தெருவை
கடந்து முடியவில்லை
உனது பாடுகள்
கருவறையில் வைத்து
சிலுவையில் அறைவதெப்படியென
பிரசங்கம் கேட்கிறது பூமியில்

மீட்பர்கள் அற்ற உலகம்
எப்படியிருக்குமென
நான்
ஆறேழு ஆண்டாய்
உணர ஆரம்பித்து விட்டேன்
கடலை கடந்து எனது சிநேகிதனும்
அவன் தந்தையும்
ஒரு நூற்றாண்டாய் உணர்கின்றனர்
சிலர்
ஐந்து நட்சத்திர விடுதியில்
விமான பயணத்தில்
பிரபுக்கள் உலவும் தெருவில்
சனங்கள் கூடுமிடங்களில்
மீட்பர்கள் அற்ற உலகம்
எப்படி இருக்குமென
சில மணித்தியாலமோ
சில நாட்களோஉணர்கின்றனர்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...