Tuesday, October 23, 2018

கையில் இருக்கிற ஒரு மகா சக்தி-தியின் கதை,




முப்பது ஆண்டு போயிற்று
இப்பொழுது போல் இருக்கிறது
ஈழ நிலம் ஈரமானது
அப்பொழுது இருந்த எங்கள்
ஆன்மபலத்தின் அதியுச்சம்தான் திலீபன்
இப்பொழுது எல்லாம்
இதயம் பலவீனமானவர்கள்
பார்க்கவேண்டாமென
எதையெதையோ போடுகின்றார்கள்
நாம் ஒரு உயிர் உருகி முடியும்வரை
உட்கார்ந்து இருந்தோம் நல்லூரில்
எனக்கு தெரிந்தவரை
திலீபன்தான் மகாத்மா
இதை என் ஆவிபிரியும் வரை
எவராலும் எடுத்தெறிதல் முடியாது
வசந்தகாலத்தை உதறிய
புரட்சி வைரத்தோடு பிறந்தவர்கள் நாம்
இந்த கர்வம் எங்களுடையது
ஐயாயிரமோ ஐம்பதாயிரமோ
இல்லையேல் அதற்கு முதலோ
தோன்றிய தமிழரின்
களங்கமற்ற ஒற்றைச்சொல் திலீபன்
ஒரு போதுமில்லை
இவனைபோல் ஈகம் செய்தவன்
இந்த சூரியனை ஒளித்துவைத்து
மின் மினிகளுக்கு மேளம் கொட்டலாம் என
கனவு காண்;பவர்களுக்கு
இன்னும் ஆயிரம் ஆண்டானாலும்
அது நிறைவேறாது
இன்றைக்கு பூனைக்கு நடுங்குவனுக்கெல்லாம்
வானுயர கட்டவுட்
வாயில்வந்தபடி பணியாரங்கள் பகட்டுக்கள் புகழாரங்கள்
சேனை நடத்திய இனத்துக்கு
அயலவன் குறளிக்கு ஆலாபனை செய்யும் நோய்
பகலவர்கள் எத்தனைபேரை
நம் பாதையில் கண்டிருந்தோம்
இப்பொழுது நொண்டிக்கு குதிரைகளுக்கு
நூறு பொன்னாடை
அன்றிருந்தான் பார்த்தீபன்
அடங்காதாகத்துடன்
அவனது ஐந்து கோரிக்கையையும்
என்னவென்று கேட்க வராத கூட்டத்தோடு
இன்று கும்மாளமடிக்க காலம் சொல்கின்றது
என்ன இழிவு எமக்கு ஏன் இந்த சோதனை
கண்ணெதிரே கருகிய மலரை
நெஞ்சிலே சுமந்துகொண்டு
நஞ்சினை அருந்துவதுபோல
நயவஞ்சக சிரிப்புக்களின் முன் குந்தியிருக்கிறோம்
மக்கள் புரட்சி வெடிக்கும்
வடக்கும் வன்னியும் மட்டக்களப்பும்
முட்டிமோதும் ஒன்றாய் எதிரிகளோடு
கனவு கண்டான் பசிவயிற்றோடு
அந்த பைந்தமிழ் தவக்கொழுந்து
என்ன நடந்தது
உள்ளுக்குள் உரசல்கள்
அது ஊடலாய் இருந்திருப்பின்
காதலாகியாவது கசிந்திருக்கும்
மோதலாகி முளைத்து முறுக்கேறி நிற்கிறது
அவனவனுக்கு இது
அப்பிள்யூஸ் அருந்திய புளுகம்
மௌ;ள ஊடுருவி திண்ணைவரை வந்திருந்து
சிற்றிவேசiனை பார்த்து சிக்சர் அடிக்கிறான்
எத்தனை உதிரம் எத்தனை மூச்சு
எத்தனை காயம் எத்தனை இழப்பு
எண்ண இன்றிரவும் நித்திரை வராது
எப்படியும் விடியும் என்று
முள்ளிவாய்க்கால்வரை
தியாகசீலர்களின் கனவு சுமந்துபோனவர்கள்
முக்கால் வாசிப்பேருக்கு
நித்தியத்தில் பாதி கண்ணீரால் நிறைகின்றது
எப்பொழுது எழும் எங்கள் வானில் விடிவெள்ளி
ஏங்கிச்செத்துப்போனவர்களும் ஏராளம்பேர்
எந்த கலப்புமற்ற
இதயசுத்தியில் நிறைந்த
தங்கப்புதல்வர்களின் அர்ப்பணிப்புக்கு
உலக அரங்கு அசையுமென ஏம்பலிக்கின்றது மனம்
நாம் சத்தியத்துக்காய் வீழ்ந்தோமென
வீறாப்புடன் காட்ட
கையில் இருக்கிற ஒரு மகா சக்தி திலீபன்
எங்கள் மனத்திரைகளில் ஓடவேண்டிய முழுநீள காவியமது
வறண்ட இனத்துக்கு வந்த வான் நதி அது
மறந்துபோகாமல் மானத்துடன் எழுதுங்கள்
உலக மகாத்மா திலீபன் என
இறந்துவிடக்கூடாது ஒருபோதும் தர்மம்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...