Tuesday, October 23, 2018

அண்ணையும்அன்னையும்-தியின் கதை,




அப்பழுக்கற்றவென
அரங்குளில் பலர் கொப்பளிக்க கேட்பதுண்டு
அள்ள குறையாத நஞ்சையும்
நம்மிடையே வைத்தபடி நெளிகின்ற நயவஞ்சகங்களுக்கும்
நாதாரிகளுக்கும்
அப்பழுக்கற்ற என அடைமொழி சேர்க்கும்போது
எப்பிடி இருந்த நாம் இப்படி ஆயிற்றோமென
வடிவேலாய் சலிப்பதுண்டு
அதை திலீபனைப்போன்ற தீபங்களுக்கே சொல்லத்தகுமாம்
அண்ணையையும் அன்னை மண்ணையும் தவிர
வேறெதுவும் நினைக்காத வெள்ளையாய் இருந்தான்
புரட்சி வரலாறுகளை புரட்டிப்படித்த அந்தப்புலிக்கு
உலகம் தெரியாதெனவும் உரைத்தல் இயலா
சேயில் பிடலில் கொசிமில்
உலவிப்பார்த்தவனுக்கு
நிலாக்காயுதே 
நேரம் நல்ல நேரம் என்னதான் செய்திருக்கும்
மாட்டினை எடுத்து மடிப்புக்குலையாமல் கொழுவி
சாளி தடவி சயிக்கிளில்
வேம்படிப்பக்கத்தால் உளக்கி
மினிஸ் கேட்டில் பலர் மினக்கெட்ட காலத்தில்
கசங்கிய தலையும் குண்டுமாய் பதுங்கிய
அப்பழுக்கற்றதன்  பெயர்தான் திலீபன்
சத்தியா கட்டும் அம்பிகா வெட்டும்
இளசுகளை பிடித்து உலுப்பிய பருவத்தில்தான்
;மந்திகள் கூட்டம் எம் மண்ணையாளவாவென
சந்தியில் நின்று
சறத்துக்குள் குண்டோடு சிந்தித்தவன்
சத்தியாகிரகமிருந்து
தன்னுடலை சாவுக்கு தர சித்தமானான்
அப்பழுக்கற்றவன்
இப்படி இவன் தடத்தில் எராளம் இளமைகள்
தாராளமாய் மண்ணில் விதைந்தன
சந்திக்கே வராத சங்கதியாய் இருந்த சரித்திரங்கள் பலநூறு
தண்ணியடித்தால்தான் இன்று
ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்
பாட்டுத் தேவையென்றால்
அன்றைக்கே செல்லப்பாவை அழைத்து
மன்னிக்கவேண்டும் ஐயா
நீங்கள் பாடாமலிருங்கள் என கூறியிருக்கலாம்
அண்ணை சொன்னால்
கண்ணை மூடிக்கொண்டு கடலை அளந்துவரும்
புனலின் புத்திரர்களும்
அன்னை மண்ணுக்காய்
விண்ணை கடந்து போய் வீரம் விளையாடிவரும்
வாயுவின் வல்லமைகளும்
மண்ணை நினைத்தே சொல்லி வெடித்த
சொல்லமுடியா அற்புதங்களும்
எங்கள் தாய்வயிற்றிலா வந்துதித்தனர்
வாயடைக்க வைக்கிறது
இன்றைய வாழ்வுசகதி
ஆட்டோ ஸ்ராண்டிலும் அன்றாட கூலியாகவும்
இன்றைய சபைகளில் இறுதி வரிசையிலும்
மாற்றத்துணியில்லா சீருடையாகவும்
மனதில் விழும் கண்ணீரை மறைப்பதாகவும்
அமைதியாய் ஒதுங்கி நிற்கும்
அண்ணையையும் அன்னை மண்ணையும் தவிர
வேறெதுவும் நினைக்காமல் இருந்த
நிலவுகளை சூரியன்களை காணும்போது
அப்பழக்கற்ற தியாகிகளை
எப்படி எழுதுவதென புரியாது மனம்துடிக்கும்
கைத்தொலைபேசியிலல்ல
எங்கள் கனவுகளில் றீலோட் செய்யவேண்டிய
சேதிகள் ஒன்றல்ல பல்லாயிரம்
அநேகமாய் கழிக்கவேண்டியதை கூட்டிக்கொண்டிருக்கின்றோம்
காலத்துக்கும் ஒரு கடவுச்சீட்டுண்டு
அதுவும் முகவரி தவறானவர்களை முடக்கியே வைத்திருக்கும்
திலீபன் உயிரெழுத்தை
பெரிதாய் எழுதி தொடங்கவேண்டும்
வெற்றிடங்களை நாம்தான் நிரப்பவேண்டும்
வேறுயாரும் நிரப்பினால்
காலத்தில் நாம் எப்போதும் மே ஐ கம் இன்தான்!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...