Friday, October 19, 2018

யாழ்ப்பாணம் போன மச்சான்-பொன்.காந்தன்




கலியாண வீடென்று
கார்பிடித்து யாழ்ப்பாணம்
புதுவேட்டி சட்டையுடன்
போனமச்சான் பதறுண்டு
பணியாரம் தின்னாமல்
பறந்தோடி வந்ததென்ன
வடிவாக சிலநாட்கள்
படுத்தெழும்பி சாப்பிட்டு
கலியான வீட்டாரின்
கதைகளையும் கேட்டிட்டு
கசூரினா பக்கமும்
காற்றுரசு போய்விட்டு
வருவதாய் போனவரே
கடுகதியாய் திரும்பியதன்
கதையினைத்தான் உரைப்பீரோ

எடி ஆத்தை கோப்பாய்
கொக்குவில் மானிப்பாய்
எப்பக்கம் பார்த்தாலும்
எத்தினமும் வாள்வெட்டு
திருவிழா செத்தவீடு
கொண்டாட்டம் என்றன்றி
கத்தியினை ஏந்தியங்கு
காவாலிச் சனியன்கள்
செத்திடுவேனெனும் பயத்தில்
மத்தியானம் சாப்பிடாமல்
மடத்தலை கடித்துவிட்டு
வட்டுக் கோட்டைக்கும்
வரச்சொன்ன சித்தப்பா
அழைப்புக்கு போகாமால்
அங்கால குள்ளர்களாம்
அறிந்து அறிவுகெட்டு
குழம்பித் திரும்பிவிட்டேன்
ஐயோ ஆளைவிடு

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...