Friday, October 19, 2018

ஆட்காட்டி-பொன்.காந்தன்





முட்டை ஐந்திட்டது முந்தநாள் வல்லையில்
செட்டைவிரித்துசீர் பார்த்து பெட்டை ஆக்காட்டி
அயல் அட்iயில் அவள் அக்கையின்
பக்கமெலாம் திருடும் பழுப்பு நிறப்பூனை
மூக்கில் கறுப்புடன் முழுஇடமும் அலையும்
கறுத்தப்பாறியின் கள்ளநாய்
இன்னபிற விசயந்து எகிறிவீசும்காற்று
ஏவற்றுக்கும் காவலிட்டு ஆட்காட்டி அடைகாக்க
பொரித்தது ஐந்தும்
தாய்போல் மூன்று தந்தைபோல் இரண்டு
ஏகப்பட்ட மகிழ்ச்சி
எனினும் ஆட்காட்டி அடக்கி வாசித்தது
அடுத்தவர் பலருக்கு அலட்ட விரும்பவில்லை
இரையை கொணர்ந்து இரகசிமாய் கொடுத்தது
வளரும் தன் குஞ்சுகளுக்கு
வார்த்தை நாலுரைத்தது
வீண் சோலிவேண்டாம்
கவனியும் கண்மணிகாள்
திறமெல்லம் இருந்து
உறவெல்லாம் மகிழந்த
ஊரொல்லாம் இப்ப
காவாலிக்கூட்டம்
கற்றோரின் பூமியில்
பெற்றோரின் சொல்கேட்கே
பெருச்சாளியாகி பிள்ளைகள்
தெருச்சோலியோடு திருகுதாளங்கள்
சண்டாளரவரோடு சகவாசம் வேண்டாம்
மண்டாடி கேட்கிறேன்
மனதுக்கேற்றபடி வானம்விரிந்துளது
நம்பிநான் முட்டையிட்ட
நமது வேர் நிலத்தில்
சாவினை வென்ற சரித்திரங்கள்
தாயின் மடியினில் வந்துதித்தார்
இத்து தூய நிலத்திற்கொரு 
துணிவு குணம் அழகுண்டு
ஆட்காட்டிப்பாட்டில்
இனி வேட்டைக்காரன் வேண்டாம்
வெடுக்கென்று கோபம் வேண்டாம்
வினைத்திறன் நல்லாற்றல்
படித்திடவேண்டும்
புத்தியியை செதுக்கிடவேண்டும்
இதுவே இவ் அன்னையின் அவா!




No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...