Friday, October 19, 2018

தெருவிளக்கின் அணைப்பு-பொன்.காந்தன்



அந்த தெருவிளக்கை சுற்றி
பூச்சிகள் வட்டிமடித்துக்கொண்டிருந்தன
பூச்சிகளை பிடித்து சாப்பிடுவதற்கு
ஊருவிட்டு ஊருபோகும் தொழிலாளிகள்போல
பல்லிகளும்
கம்பத்தில் தங்குமிடங்கள் எடுத்துக்கொண்டன

மழைகாலங்களில் தூறல்கள்
அந்த ஒளியில் பட்டு
வெள்ளிகம்பிகளாய் நிலத்தில் வீழும்
அந்த தெருவிளக்கை சுற்றியுள்ள
மரங்களுக்கும்
மரங்களில் கூடுகட்டிய பறவைகளுக்கும்
இரவென்று இல்லாமல் போயிற்று

அநேகமான வேளைகளில்
இரவில்
தூரப்பயணங்கள் போய்திரும்புகையில்
அந்த தெருவிளக்கை காணுகையில்
ஒரு இனம்புரியாத நம்பிக்கை தெம்பு
தொப்பூள் கொடி உணர்வு

அந்த இடத்தில்
நீண்ட காலத்திற்கு முன்பு
புளுதி அடந்த இந்த தெருவில்
இரவாகியும் வராத எனக்காக
என் தாயாhர்
அரிக்கன் லாம்போடு நெடுநேரமாய்
காத்திருந்ததால் இருக்கலாம்



No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...