Friday, October 19, 2018

அம்மாவின் அடையாளங்கள்-பொன்.காந்தன்




அவளோர் அழகிய குழந்தையை ஈன்றெடுத்தாள்
அம்மாவின் வியர்வை வாசமும்
மிருதுவான உதடுகளும்
விரல்களின் அணைப்பும்
குழந்தையின் நினைவுகளில்
அழகிய கவிதையின் ஊற்றுக்களாய் பரவின
முந்தானை விலக்கி ஓரமாய் இருந்து
அம்மா பாலூட்டும் போதெல்லாம்
அக்கவிதை கேள்விகளுடன் குழந்தைக்குள் வளர்ந்தது
அம்மாவின் கண்களில்
எப்போதும் கரைந்துவிடாமல் இருந்த ஒரு ஏக்கம்
குழந்தைக்குள்
ஒரு கடைசிவரியை எழுதுகின்றது

அம்மாவின் மார்பில்
சிங்கள ஸ்ரீ மட்டும் குத்தப்படாது இருந்திருந்திருந்தால்
எனது அம்மா
இப்பிரபஞ்சத்திலேயே பேரழகியாய்  இருந்திருப்பாள்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...