Friday, October 19, 2018

சிணுங்கி துளிர்தல்-பொன்.காந்தன்




இப்போது
கடவுள் வந்தாலும்
ஒரு மனிதனைப்போல
கடந்து போய் விடுவேன்

தொட்டா சிணுங்கியில் தொடங்கியது
என் முதல் ஆச்சரியம்
வானவில்லிலும் தேய் பிறையிலும்
விழி உயர்த்தி நின்றேன்

பின்னொரு நாள்
உனது விழிகளில்
எனது செல்ல பிராணி
தூங்கி கொண்டிருந்தது

மழை நாளுக்காய்
காத்திருந்த கப்பலில்
நானும் நீயும்
பூனை பொம்மையும்
ஒரு நாள் ஏற காத்திருந்து
ஏமாந்தும் போனோம்

எனக்குள்ள கேள்வியெல்லாம்
ஆச்சரியங்களில் இருந்து
என்னை பறித்தது யார்
அவர்கள் மீது
எல்லையற்ற கோபமாயுள்ளேன்

கூட்டமாய் கூட்டமாய்
பறந்து செல்லும்
பட்டாம் பூச்சிகளுக்கு நடுவில்
ஒரு ஜடமாய் நிற்கிறேன்
நீர் வெறுப்பு நாயின் கண்ணில்
பனி துளியின் வாழ்வு முடிகிறது

எனது வாழ்வும் முடியும்
யாரும் தொடாத
பல ஆச்சரியங்களோடு
என்ன சொல்ல
ஆன்மத்தை மிதித்து போக
சிணுங்கித் துளிர்க்கும் வாழ்வு !

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...