கொடிய போர் கண்ட நகரம் போலில்லை
காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை
கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும் மனத்தை
உண்டாக்கவில்லை
யாரேனும் பறக்கத் தொடங்கவில்லை
இத்தனைக்கும் தன்னையுணரும் நகரமொன்று
பெருவெடிப்பின் இன்னொரு துண்டின்
பரிணாம ஆரச்சரியத்தை நிகழ்த்தியிருக்கும்
உடைந்து நொறுங்கிப் போய்விட்டதை
ஒத்துக்கொண்டவைகள்
கற்களை அடுக்கி கோபுரங்கள் எழுப்பிவிட்டன
இந்த நகரம் இன்னமும்
இல்லாதவைகளை திறந்து வைத்துவிட்டு
தினமும் மூடுகின்றன
பெருங்குழியிலிருந்து ஏறிவர நீளாத
இருக்கின்ற இந்த கைகளும்
போரில் இழக்கப்பட்டிருக்கலாம்
போரை விட கொடிய நாட்களை
இப்போதுதான் இந்த நகரம் கடக்கின்றது
இருளுக்குள் சிரிக்கும் ஒலிகள்
எதையுணர்த்துகின்றது

No comments:
Post a Comment