Sunday, July 9, 2023

காமினியின் தனிமை -பொன்.காந்தன்,


இன்று முன்னிரவில்சுட்டி புரத்தை கடந்து கொண்டிருந்தேன். வடக்கு வீதியில் பூந் தண்டிகையில் ஆச்சி எழுந்தருளி இருக்கிறாள்.அழகில் மயங்கி வரத்தை கேட் க மறந்து விட்டேன். வெற்று மேனியும் வேட்டியுமாய் பட்டும் சேலையுமாய் மங்கல திரள் ஒன்று. ஆனால் இன்று இயக்கச்சி சந்திக்கு அருகிலும் பரந்தனிலும் கரடி போக்கிலும் தேர் இழுக்க வடம் பிடிக்க. நீளும் கூட்டமாய் தங்கள் இஷ்ட வாகனங்களோடு பெட்ரோல் நிரப்ப நின்ற கூட்டத்தை விட சுட்டி புரத்தில் குறைவுதான். ஒரு காலத்தில் கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் என்ற பாடலை நமது பெருமை வீரமணி ஐயர் எழுதினார். பட்டி தொட்டி எங்கும்அது பக்தி மயமாக்கியது. ஆனந்தபைரவி கல்யாணி பாகேஸ்ரீ ரஞ்சனி ராகங்களில் குழைந்து விளைந்து மனது நனைந்ததுபோல ஒரு பாடலின் சரணங்களாய் ஆனையிறவை கடக்கும் கண்களில் பெற்றோலுக்கு காத்திருக்கும் வரிசை. வற்றாப்பளையா மடுவா சுட்டிப்புரமா பெட்ரோல் செற்றா என்று கேட்டால் இன்றைய நாளில் நம்மவர் பதில் கணமும் தாமதமின்றி பெட்ரோல் பக்கம்தான்.
ஆனையிறவை கடக்கும் பயணியாய் ஒவொரு காலத்திலும் ஒவொரு அனுபவங்கள். ஒரு காலத்தில் ஆனையிற வை கடக்க முடியவில்லை குறுக்கே போர் நடந்து கொண்டிருந்தது. புளியடிக்கு அப்பால் குறுக்கே பெரிய மறைப்பு படங்கு என்று நினைக்கிறேன். அது சன்னங்களால் சல்லடை ஆகி இருந்தது. ஆனையிறவு பற்றி போராளிகள் சொன்ன கதைகள் சருகுகள் நிறைந்து பயணங் களை இழந்து நாணலால் மூடி கிடந்த தெருவுக்கு அப்பால் உலாவின. திடீரென பரபரப்பாகும் நாள்களில் ஆணையிறவு பக்கமாய் இலை குழை தென்னோலை களோடு வாகனங்கள் ஓடி திரிந்தன.விமானத்தில் இருந்து பார்த்த குண்டு வீச்சு விமானி என்ன ஆனையிறவு தெருவில் மரங்கள் ஓடுகின்றன என்று சொன்ன தாயும் ஒரு கதை அன்று உலாவியது.
ஆனையிறவு என்ற பேரழகி என்னை போன்ற உங்களில் சிலரை போல கட்டுடலை முழுதாய் இரசிக்க நினைப்பவருக்கு தன் அங்கத்தின் மயக்கம் தரும் அழகின் அற்புதங்களை முழுதாய் காட்ட நினை த்திருக்ககூடும். அதற்கு அவள் முயலும் போதெல்லாம் ஏதோ தடைகள் அபசகுனகள் தயங்க வைத்து விடுகின்றன. மாலை வேளையில் நீர் காகங்கள் கிளிநொச்சியை கடந்து ஆ னையிறவு இருந்து நிரை நிரையாய் திரும்பும் அப்போது ஆனையிறவு அழைப்பது போல் தோன்றும். கை வீசும் பயணியாய் போக கிடைத்த சந்தர்ப்பங்கள் நீடிக்கவில்லை.
இன்று காமினியை வைத்து அடைந்த மகிழ்ச்சியும் வற்றி போனது போல இன்று மாலை ஆனையிற வை கடக்கும் போது இருந்தது.புல்டோசரும் காமினியும் இருக்கும் இடத்தில் எப்போதும் நிரம்பி வழியும் கூட்டமும் இன்று இல்லை. காமினியும் தனித்து விடப்பட்டா னோ என எண்ண தோன்றுகிறது. எங்கே நிரம்பி வழிந்த அந்த கூட்டம். வந்து போக எரி பொருள் தட்டு பாடா.ஏன் எரி பொருள் தட்டு பாடு வந்தது.காமினியை வந்து கொண்டாடி போக பயண கட்டணம் அதிகமா. எப்படி அதிகமானது. புல் டோசரையும் காமினியையும் பார்த்து ஒரு இரானுவ சிப்பாய் சொல்லும் கதை கேட்டு ஆணையிறவு வெளியில் கூட்டம் கூட்டமாய் சமைத்துண்ணும் காட் சிகள் ஏன் வற்றி போகிறது. அரிசி விலையா பாற் சோறு ஆக்க முடிய வில்லயா. ஆனை யிறவை கடக்கும் பயணியாய் காமினியின் சிலையடியில் ஆயிரம் கேள்விகளை கண்டேன். காமினியும் தனித்து விடப்படுவான்.

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...