Sunday, July 9, 2023

துகில்-பொன்.காந்தன்




முதலில் பிக்கு துகில் உரிந்தான் அவளை

அடுத்து

அவள் இனத்தை சேர்ந்த
அண்ணனோ தம்பியோ மாமனோ
அயலானோ
அவள் ஆடைகளை இழுக்கிறான்
அவள் தடுக்கிறாள்
பறிக்கிறார்கள்
பறிப்பட்டு ஒரு சந்தர்ப்பத்தில்
அவள் முழு நிர்வாணியானாள்
அவள் யோனியையும் மார்பையும்
அந்த வக்கிரங்கள் படம் பிடிக்கின்றன
முதலில் பிக்கு துகில் உரிந்தான்
பின்பு
அந்த மிருகங்கள்
பிறகு வலை தளத்தில் அனைவரும்
துகில் உரிந்தோம் அவளை
இதே மிருகம் தான்
முள்ளி வாய்க்காலிலும் நின்றது
இதே போலவே
எங்கள் தங்கைகளின் ஆடைகள்
மன்றாட மன்றாட
பறிக்க பட்டன
பின் யோனிகளை கடித்து குதறியது
மார்பை
பூட்ஸ் காலால் மிதித்தது
நிர்வாணத்தை கூட்டாக இரசித்தது
பிறகு வலை தளத்தில்
எல்லோராலும் துகில் உரியப்பட்டார்கள்
எந்த பெண்ணின் ஆடையையும்
பறிக்க
இழுக்க
நிர்வாணப்படுத்த
எந்த நாய்க்கும் உரிமை கிடையாது
சிங்களத்தியாய் இருந்தாலும்
தமிழிச்சியாய் ஆனாலும்
வேசியே ஆனாலும்
அவளுக்கு உரிமைகள் உண்டு
அதை ஆண் என்ற மிருகம்
தொட முடியாது

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...