Tuesday, March 8, 2022

அழைப்பு -பொன்.காந்தன்


இன்றொரு அழைப்பு
திறந்தபோது
ஒரு ஓடமாகிவிட்டது அறை
கழற்றி அப்படியே போட்டு குமிந்த
ஆடைகள் புல்வெளியாகிவிட்டன
பாசி பிடித்த பாத்றூமின்
உடைந்த பைப் ஓடையாய் சலசலத்தது
ஒற்றைப்பிணைச்சலின்
ஊசாலடிக்கொண்டிருந்த யன்னலில்
மலைச்சாரல்
ஏதோ ஒரு மீன் கொத்தி
அன்ரனாவில் அலகு தேய்த்தது
புட்டினும் ஜெலென்ஸ்கியும் இல்லை
பனிக்கரடியும் குட்டியும்
மூலையில் கிடந்த
சீக்கிரட் கட்டைகளின் மிதந்து
தூண்டிலும் போடலாம்
காஸ் இன்றி
பாழடைந்த சமையறையில்
வயற்காட்டு மரம்
முகில்கள் ஆகிவிட்ட சுவர்கள்
மூடிக்கொண்ட கானகங்கள்
படுக்கை அறையின் ஆழத்தில்
ஆனந்தத்தில் நீந்தின மீன்கள்
மின்வெட்டு வேளையில்
எங்கு கலந்தது பேரின்பம் கடைசியில்
இன்னொரு முறை அழை நதியே

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...