Sunday, March 21, 2021

ஒளிவட்டம்-பொன்.காந்தன்


கோபுரத்தில்
மரக்கிளைகளில்
கூரைகளில்
குப்பை மேட்டில்
தெருவில்
ஏதுமற்ற வெளிகளில்
வழியற்ற காட்டில்
முள்ளில் புல்லில்
வேலிகளில்
சூரியனுக்கு பக்கத்தில்
பறக்கிறதாய்
புல்லரித்திருத்த
காற்றாடி நூல்
சிக்குண்டு கிடக்கிறது
இப்போது
ஒரு முனையில்
ஏக்கமும் தோல்வியும்
மறுமுனையில்
வேடிக்கையும் கேலியும்
சிக்குண்ட நூல்
கைநழுவுதலிலும்
ஒளிவட்டம் தோன்றும்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...