ஊர் முடக்க நாட்களில்
பூங்காவனத் திருவிழாவின்
தண்டிகைக்கு நடுவில்
முகநூல்கள்
மச்சம் தீயத்துக்குள்
சமையறையில்
இடையிடையே பத்திரகாளி
வெள்ளைத் தாமரையில்
கடந்த கால வினாக்களுடன்
சூம் அழைக்கிறது
இரவு
கலச அபிசேகத்தில்
மீனாட்சியின் மூக்குத்தி
கன்னங்களில் உரசுகின்றது
நான்கு சாமப் பூசையிலும்
ஆண்டாள் வேண்டுதலில்
சின்னத்திரை மூடவில்லை
இடைக்கிடை
மடப்பள்ளியின் பஞ்சாமிர்தம்
மடியில் சாய்கிறது
தக்கனின் யாகசாலையாய்
விறாந்தை விரியலாம்
சங்கராச்சாரிய பீடமாகலாம்
சொல்லத்தெரியவில்லை
No comments:
Post a Comment