மழைக்காக காத்திருக்கிறேன்
மழைவராமலும் போகலாம்
மழை வந்தால்
வானவில்லுக்காக காத்திருப்பேன்
வானவில்
தோன்றாமலும் போகலாம்
வானவில் தோன்றினால்
நீயும் நானும் அதிலமர
கனவு காண்கிறேன்
கனவு மெய்க்காமலும் போகலாம்
ஒரு தேனீர் மேசையில்
காத்திருத்தலின் சுகத்தை
உணர முடியாதபோது
நம்பிக்கையற்ற வார்த்தைகள்
வெகு தூரத்தில்
எல்லாவற்றையும் வைத்திருக்கிறது
தேவர்களிடம் மட்டுமல்ல
சாமான்யனிடமும்
தேவாமிர்தம் கிடைக்கும்
எங்கேணும் ஒரு கணத்திலும்
காதல் தோற்காதிருந்தால்

No comments:
Post a Comment