Tuesday, July 7, 2020

பட்டணப்பக்கம்-பொன்.காந்தன்,

பட்டணப்பக்கம் போய்
பாமினி ரெக்ஸ்ரைலில்
வெட்டுங்கோ முதலாளி
ஒரு பப்ளீன் ஒரு மீற்றர்
செப்பிற்று நின்றேன் நான்
பாவாடைக்கோ வேணும்
பார்த்து நிறம் காட்டும்
பிங் மஜந்தா மரூன்
நீலம் கறுப்பு வெள்ளை
காட்டினால் உடன்
கறுக்கென்று வெட்ட
கத்தரிக்கோலொடு பெடியன்
ஏதோ ஒன்றை தாங்கோ
வேண்டா வெறுப்பாய் சொல்ல
இதென்ன மனுசனிது
இரசனை கெட்டதெனப்பின்
புடவைக்கடை என்னை
பேசிச் சிரித்திருக்கும்
அடுத்து நானெங்கே
கொடுத்து தையலக்கா
இடுப்பளவு கேட்பாரென
படுத்திருந்து யோசிப்பீரோ
அதுதான் நடக்கவில்லை
முடி திருத்தும்
அகத்தில் போய்
புதிய பப்ளீனை
எடுத்துக்கொடுத்துவிட்டு
ஏறி உட்கார்ந்தேன்
கழுத்தில் கட்டினார்கள்
எனக்கங்கு பாவாடை.
இதற்குப் பிறமென்னை
எட்டிப் பார்க்குமோ கொரோனோ!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...