Tuesday, July 7, 2020

அழித்தல்-பொன்.காந்தன்,


அடிக்கடி
ஆட்களற்ற நகரமாக்கிவிட்டு
உன்னை மட்டும்
மிச்சமாய் விடும் அழித்தல்
எல்லாத் தரிப்பிடத்திலும்
நீயே ஏறிக்கொள்ளும் பேரூந்து
இறங்குமிடத்திலெல்லாம்
காத்திருக்கும்
தீராமோகத்தின் முகம்
சாலையில்
தவறவிடப்பட்ட பையில்
நட்சத்திரங்களும் வானவில்லும்
நிரம்பியதான
ஒரு தேடப்படும் பேரவா
பாதிச் செம்பரத்தை பூக்குமுன்
உன் கூந்தலுக்கு முன்
விரிந்தது ஓர் அரச்சனை தட்டு
ஒவ்வொன்றாய் அடுக்க அடுக்க
உடைந்துவிழும்
கற்பனையில் உன் விரல்பட்டு
கோபுரம் கட்டியாயிற்று
அழித்தலின் புது மந்திரத்தை
கடவுளின் காதுக்குள்
நான் ஓதி விடுகின்றேன்
ஊழிகளின் போதும்
தேவதைகள் எஞ்சுவார்கள்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...