Sunday, January 12, 2020

ஒட்டகங்களோடிருக்கிறேன்-பொன்.காந்தன்,



ஒ! ஒட்டகங்களே
ஒ என்ற உயிரெழுத்தின்
என் அரிவரிப்புத்தகத்தில்
அடையாளங்களே
இந்த பூமி
எங்களுக்கும் உங்களுக்குமானது
உங்கள் உரிமைகளை பறிக்கும்
உலகத்தை
சபித்து உயிர் பிரியுங்கள்
ஒட்டகங்களே
நான் உங்களோடு இருக்கிறேன்
எனது தண்ணீரை
நீங்கள் திருடுவதாக
நான் ஒரு துளியும் எண்ணமில்லை
நதியில் இருந்த
என் தாகத்துக்கான தண்ணீரை
நானே கடந்தேன்
நானே மறந்தேன்
நானே தொலைத்தேன்
ஓ! ஒட்டகங்களே
தண்ணீரில் நீங்கள் முகம் கழுவியதில்லை
நீச்சல் தடாகம் அமைத்ததில்லை
போத்தலில் அடைத்து வியாபாரமாக்கியதில்லை
குளிர்பானங்களுக்காய் உறிஞ்சியதில்லை
நதிகளில்
தொழிற் சாலை கழிவுகளை
நீங்கள் கொட்டியதில்லை
எதையுமே நீங்கள் செய்ததில்லை
கொல்லப்படவேண்டியது
நீங்களே அல்ல
ஒட்டகங்களே
நான் உங்களோடிருக்கிறேன்
அரிவரியில் இருந்து
உங்கள் உயிர்கள் பறிக்கப்படும்
இக்கணம் வரை
தாகத்துக்கு மட்டும்
தண்ணீர் குடிக்கும்
ஒட்டகங்களே ஆன்மாக்களே
கருமுகில்களும்
எங்களுக்கும் உங்களுக்குமாகவே
பாதியை எடுத்துக் கொள்ளுங்கள்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...