Friday, October 19, 2018
ஏழு கடல்-ஏழு கடல்
எனது முற்றத்தில்
ஏழு கடல்கள் இருக்கிறது
உங்களால் நம்பமுடியாமல் இருக்கலாம்
வீட்டுக்குள் வந்து
அறைக்குள் நுழைந்த
அட்டையை வேகமாக தட்டிவிட்டபோது
முற்றத்தில் விழுந்த அது
தன்னை ஏழுகடல் தாண்டி
வீசிவிட்டதாக ஓலமிட்டு திட்டியது என்னை
ஒரு அகதியின் பாசை போலவும்
சில கடந்த காலங்கள் போலவும்
என்னை அது வருத்தியது
மீண்டும் அட்டையாய் யாவும்
திரும்பப்போவதில்லையெனவும்
மனம் சொல்கின்றது
Subscribe to:
Post Comments (Atom)
பிரசாதமே!!
கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும் மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...
-
எங்கள் வீட்டில் இருந்து கிழக்காக புறப்படும்போது முதலில் முடியப்பர் வீடு ஆழ்வார் பிள்ளை வீடு வரை போகும் ஒரு குச்சொழுங்கை இடையில் குளியாப்பிட்...
-
போர் கால நினைவுகள் நிறைய உண்டு. போர் முடிந்து இப்போது பதின் மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. போருக்கு பின்னரான ஆரம்ப காலங்கள் இப்போது நினைவுகள...
-
கோழிக்கு தவிடு வாங்க குஞ்சு போய் வா என்பாள் அம்மா ஐம்பது சதம் இலஞ்சம் கேட்பேன் ஆக்கினை தாங்கேலாமல் ஆமோதிப்பாள் கோணிப்பையுடன் இராசையர் கடை தா...
No comments:
Post a Comment