வந்து பார்த்தபோது
பெட்டிக்குள் இருந்த பட்டுசேலை
முற்றத்து
பூச்செடிக்கு சுற்றப்பட்டிருந்தது
விறாந்தாவில்
மணல் கும்பிகள் சில
செவ்விரத்தை இலை பூக்கள்
பொட்டு வைத்தபடி நாய்குட்டி
கதிரையில் குந்தியிருந்தது
ஐந்தாறு சிரட்டைகள்
தொலைக்காட்சி பெட்டிக்குமேல்
குந்தியிருந்தன
குழந்தைகளின் வீட்டில் வாழ
கொஞ்சம் நேரம் நாமெல்லோரும்
எங்கள் வீட்டில் இருந்து
வெளியே போய் வர வேண்டியிருக்கிறது
No comments:
Post a Comment