Saturday, October 20, 2018

சிரிப்பு-பொன்.காந்தன்




வாசனை மேவ
வடிவாய் குளித்து
மடிப்புக் குலையா
ஆடை தரித்து
மிசினில் அம்மா
மினிற்சில் சமைத்த
தோசை சம்பலை
தொண்டைக்குள் திணித்து
இடுப்பில் ஜீன்சை
தொங்க விட்டு
இதயம் கவர்ந்த
அவளை நினைந்து
கண்ணாடி முன்னே
காவடி ஆடி
சேட்டை கொஞ்சம்
மேல திறந்து
மெல்லியதாய்
உள்ளாடை தெரிய
காசு கறக்கும்
காட்டை எடுத்து
கறுத்த
தலைக் கவசத்துள்
போனை செருகி
சிரித்து சிணுங்கி
கதைத்துக் கொண்டு
செல்வ் ஸ்ராட்டில்
உந்தி முறுக்கி
பாதையில் பறந்து ஏறி
பைலட் போல தம்பி ஆகி
சந்தியியிலே சறுக்கி திருப்ப
குந்தியிருந்து கம்பத்தருகில்
சித்திரபுத்திரனார் சிரிக்க கண்டேன்.


No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...