அஞ்சு நூறு மூன்று நூறு
முந்தியிது கொழும்பில்தான்
ஆடைக்கும் அப்பிளுக்கும்
அரையின் கீழ் அதுகளுக்கும்
போறவரை இழுத்து
புன்னகையால் வளைத்து
பொய்களும் புளுகித்தள்ளி
காய்ந்த கூட்டம் எங்களுக்கு
களுபண்டா விற்றுவிட
நாங்களும்தான் மலிவென்று
நாலைஞ்சு சோடிகளை
ஆரஞ்சு வைற்ஜெலோ
அடங்காமல் றெட்பிளக்கில்
வாங்கி வைத்தடைந்து
வடக்குவரும் வசுபிடித்து
நாள்முழுக்க பயணப்பட்டு
கால்நொந்து கைஉழைஞ்சு
ஊருக்கு வந்திறங்கி
உள்ளானை எடுத்துக்காட்டி
ஆருக்கு பிடிக்குமென
ஆசைகளை அள்ளிவிட்டு
அஞ்சாறு நாள் கழிய
ஆங்காங்கு நூல்கிளம்ப
படியால இறங்குகையில்
அடியால தையல்விட
எட அறுவான்
ஏமாத்து காரரென
புறுபுறுத்து ரெயிலரிடம்
புதுசெல்லாம் எடுத்துச்சென்று
மறுபடியும் நூலோடி
மாதம் ஓரிரண்டு
மாத்தி மாத்திக் கொழுவுகின்ற
கொழும்புதந்த அனுபவங்கள்
கோடிக்குள் வந்திநிற்க
கோதாரி எதை சொல்ல
வேப்பங்குழை வைக்கலுக்குள்
விழுந்து கண்டிப்போகாமல்
பிடுங்கிப்போட்டு பழுக்கவைத்த
அம்பலவி விளாட்
அகிலஉலகப்புகழ்
கடைசிவரைகனியினிக்கும்
கறுத்தக்கொழும்பான்
கடித்து அப்படியே
கடவாய்முழுக்கத்தின்னும்
காலம் கடந்துபோயிப்ப
அஞ்சு நூறென
அன்றைக்கு சந்தையிலே
அவனொருவன் கூவிநிற்க
நம்பிமயங்கி போய்நானும்
யாழ்ப்பாணப்பழந்தானே
சோக்காய்த்தான் இருக்குமென
பாத்துஎடுத்து மினக்கெடாமல்
பழங்கள் ஐந்தை வாங்கிவந்து
வீட்டிலுண்ண விரும்புகையில்
வெம்பல்சிலதுவிழுந்துசிலது
மஞ்சளாக்க மருந்து்அடித்தும்
என்ன செய்ய எல்லாம் இப்ப
வெம்பல் குணம்தான்
வெளியில் பார்த்தால்
மஞ்சள் சிவப்பு மாயாஜாலம்
எங்கே போயந்த இனிய கறுத்த
கொழும்பான்கனியை
மனசுமயங்க சுவைத்திருப்பேன்!!
கொந்தலுக்கலையும்
அந்த குமரிகளின் நினைவில்
அடிக்கடி
இன்றெனை மறந்திருப்பேன்
No comments:
Post a Comment