Saturday, October 20, 2018

தமிழ்நீர்-பொன்.காந்தன்




கோடை கொழுத்தும் வெயில்
ஆடை அவிழ்த்தெறியும் அவிச்சல்
ஜாடையில் சேர்ந்த கூட்டம்
ஓடையில் நுழைகிறது
ஓலை விரித்து உர்கார்ந்து
காலை சீவிய பனங்கள்ளெடுத்து
தாடை வழிய வழிய உறிஞ்சி
இது தமிழ்நீர் என்றது
பாடைக்கிது அழையாது
பாழ்ங் கசிப்பாய் ஈரல் அறுக்காது
கூடிவரும் குளிர்மை
பாடொரு பாட்டு
பரமசிவன் கழுத்தில் இருந்து
பாம்பு கேட்டது
கருடா செளக்கியமா
இன்னும் உண்டு நண்பா
ஊற்றி இழு
காற்றில் மிதக்கும் கைகள்
கற்பகதருவே சரணம்
அப்புவின் தலையின்னும்
நரையாமல் இருக்கும் காரணம்
இப்போது புரிகிறதாம்
வெப்பம் தணிந்து
விழி செருகித்தூக்கம்
மப்புக்கட்டி மனசுக்குள் ஒரு மழை
கற்பனை தளைத்தொரு கவிதை
ஊறிடும் கள்ளுற்பவமோ
வள்ளுவன் மொண்டும்
வழி வந்த வானமிர்தோ
செப்பிட வார்த்தையில்லையென
சிரிக்கிறது சிற்றோடை
ஆனிவரை
ஊறுமாம் இவ்வறம்
அல்க்ககோல் வீதம் எழுதா
அன்பினில் நுரைக்குமாம்
சிக்கெனவான தேகம்
சிறு தொந்தியேறி
பக்கென ஊதி
பழிச்சொல் ஆகுமென
ஐயமொன்றொன்றருந்துகையில்
அடிக்கடியெழுந்தாலும்
சிக்கனமாகப்போதை
சிரசில் கலந்திருக்க
தத்துவம் மேவும் தரம்
தருவது இத்தமிழ் நீர்தானாம்
விக்கினமேதுமில்லை
விதம்விதம் பெயருமில்லை
பாளை கட்டி
தட்டுற தட்டில்தான்
பதத் தாழ்வுயர்வுண்டாம்
மற்றினி அருந்துங்கால்
மனசினில் வடியுங்கள்
வடியும் கள்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...