வாருங்கள்
கதிரைக்கோர் தினம் வைப்போம்
அந்நாளில் கதிரையை குளிப்பாட்டுவோம்
கண்ணில் ஒற்றிக்கொள்வோம்
கதிர்காமத்தில் இருந்து நல்லூர்வரை
நல்லதோர் கதிரை காவடி எடுப்போம்
கதிரைக்குப் பிடித்தவை மறைவாய் படைப்போம்
பொன்னாடை போர்த்தி
அதன் பூர்வீகத்தை புகழ்ந்தும்
அது ஒட்டிப்பிடிக்கும் ஆச்சரியத்தை வியந்தும்
கருத்தாடல் விவாதம் ஆய்வரங்கம் வைப்போம்
கதிரைச்சமர் ஒன்று வைப்போம்
கதிரையின் மறுபக்கம் பார்ப்போம்
இரண்டாவது நாள் அமர்வாய்
கதிரைகளுக்கு குஞ்சம் கட்டி
விருது வழங்குவோம்
மனிதர்களில் அமர்ந்து கொள்ள கதிரைகளுக்கு முன் பதிவு அறிவிப்பு விட்டு
கதிரை தினத்தை களைகட்டவைப்போம் வாரீர்
No comments:
Post a Comment