Saturday, October 20, 2018

பாலைவன ஈரம்-பொன்.காந்தன்




எங்கள் ஊர்க்காரர் ஒருவர் உழைப்பதற்காக வெளிநாடு போனார்.அவர் போனது ஒரு அரபுநாடு.அரபு நாடு என்றால் எண்ணெய் வயல்கள் செல்வச் செழிப்பு சொல்லவேண்டுமா.உழைக்கப்போன எங்கள் ஊர்க்காரர் அரபு முதலாளி ஒருவரிடம் வேலைக்குச் சேர்ந்தார்.நம்பிக்கைக்கும் பாத்திரமாக நீண்டகாலம் முதலாளி மற்றும் முதலாளி குடும்பத்துக்கும் பணியாற்றினார்.ஒரு சந்தர்ப்பத்தில் அந்த அரபுமுதலாளி விபத்தொன்றில் சிக்கி உயிருக்குப்போராடும் நிலை.அவசரமாக குருதி தேவையாது.குருதி கொடுத்து முதலாளியின் உயிர்காக்க நம்மாள் முன்வரவும் குருதி பொருந்தவும்இந்து சமயத்தை சேர்ந்த எங்கள் ஊர்க்காரரின் குருதி இறுக்கமான மார்க்க நடைமுறைகளை கடைப்பிடிக்கும் அரபுமுதலாளிக்கு ஏற்றப்பட்டது.உயிர்மீண்டார்.முதலாளி.சில மாதங்களின் பின் எங்கள் ஊர்க்காரரை அழைத்த அந்த அரபு கோடீஸ்வரர் இவரிடம் கேட்டார்.நான் என் சொத்தில் பெரும்பங்கை உனக்கு எழுத நினைக்கிறேன் நீ அதை என்ன செய்வாயென அதற்கு நம்மாள் சொன்னார் கோயில்களுக்கும் ஆதரவற்றவர்களும் கொடுப்பேனென அரபுக்கோடீஸ்வரர் இவருக்கு சொத்துக்களை எழுதினார்.சொன்னபடி நம்மூர்க்காரரும் ஆதரவற்ற நூற்றுக்கணக்கானவருக்கு ஆதரவாக உள்ளார் என எதிர்பாராத ஒரு தெருவோரத்தில் சந்தித்த ஆதாரத்தை பெறும் ஒருவர் மூலம் இக்கதையை கேட்டபோது பாலைவனத்து ஒட்டகம் நம் ஊர்க்காரரை சுமந்தபடி செல்வதுபோல மனம் சிலிர்த்துக்கொள்கிறது

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...