Friday, October 19, 2018

அந்த நேரங்கள்-பொன்.காந்தன்




ஓலையில் செய்த மணிக்கூட்டில்
நேரம் பாத்து சொன்ன நினைவுகளை
மீட்டி பார்த்தேன்
குளித்துவிட்டு  அம்மணமாய் ஓடிக்கொண்டிருக்கிறாள் தோழி
சோறும் கறியும் சிரட்டைகளில் இருந்து கொட்டுண்டு
முற்றத்தில் பரவி கிடக்கிறது
தென்னை மட்டையில் செய்த துடுப்போடு
தெருவில் போய் கொண்டிருக்கிறான்
ஒரு அண்ணன்

கள்ளி செடி இலையில்
கீரியும் பாம்பும் படம் ஓடிக்கொண்டிருந்தது
தும்பிகள் பின்னே
ஒரு பட்டாளம்
வெடித்து பறக்கும் பஞ்சுகளை தொட்டு
உலகை மறந்து கொண்டிருந்தன புன்னகைகள்

இப்போது
இந்த சாலைகளை பார்க்கிறேன்
நிறைய கோபுரங்களும் மணிக்கூடுகளும்
இருந்தும்
எவரும் சொல்ல போவதில்லை
அந்த
ஓலை மணிக்கூட்டு அற்புத நேரத்தை

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...